ADDED : ஜூன் 02, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள் நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுதல், கட்சி தலைமையால் வழங்கப்பட்ட 3000 உறுப்பினர் அட்டைகள் 15 வார்டு செயலாளர்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.