/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எனது வார்டில் எந்தப் பணிகளும் செய்யவில்லை நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர் வேதனை
/
எனது வார்டில் எந்தப் பணிகளும் செய்யவில்லை நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர் வேதனை
எனது வார்டில் எந்தப் பணிகளும் செய்யவில்லை நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர் வேதனை
எனது வார்டில் எந்தப் பணிகளும் செய்யவில்லை நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர் வேதனை
ADDED : ஜூன் 21, 2024 05:15 AM

ஒட்டன்சத்திரம்: ''எனது வார்டில் எந்தப் பணிகளும் செய்யவில்லை '' என,ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர் தேவி பேசினார்.
தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தனர். துணைத் தலைவர் வெள்ளைச்சாமி,கமிஷனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதங்கள்...
கண்ணன்,கவுன்சிலர்,( தி.மு.க,,): குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் பணிகளுக்கு ரூ.10 லட்சத்திற்கு தீர்மானம் வைத்துள்ளீர்கள். குடிநீர் குழாய்கள் உடைந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். குளோரினேசன் அளவை அவ்வப்போது பரிசோதித்து சரியான அளவில் விநியோகம் செய்ய வேண்டும். நகராட்சி 18 வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். ஆனால் மருந்து மட்டும் வாங்குகிறீர்கள் கொசு மருந்து அடிப்பதே இல்லை
சுப்பிரமணிய பிரபு,பொறியாளர் : அடிக்கடி பரிசோதித்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
சுகாதாரஆய்வாளர் ராஜ்மோகன்: தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதற்கு ஏசி அறை தேவை. மாநகராட்சி பகுதிகளில் மட்டு அந்த வசதி உள்ளது. ஆள் பற்றாக்குறை காரணமாக மூன்று மாதங்களாக கொசு மருந்து அடிக்கவில்லை.
முகமது மீரான்,கவுன்சிலர்,(காங்.,): திருமண மண்டபங்களில் நடக்கும் விழாக்களில் நடு ரோடுகளில் வெடிவைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடிநீர் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்: நடவடிக்கை எடுக்கப்படும்
ஜெயமணி,கவுன்சிலர்,(தி.மு.க.,): வரிவிதிப்பு குறித்து பரிசீலனை செய்ய மனு கொடுத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.
கேட்கும் போதெல்லாம் பரிசீலனையில் உள்ளது என்று சொன்னார்கள். தற்போது முடியாது என்று கூறிவிட்டனர். கவுன்சிலர் கொடுக்கும் மனுவிற்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர்
கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி நீர் நிரம்பும் நிலையில் தான் துார்வாரப்படுகிறது.
அருள்மணி,கவுன்சிலர்,(தி.மு.க.,): நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் பாலம் அமைப்பது குறித்து முன்னரே தகவல் தராததால் பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் அந்த ரோட்டில் வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
திருமலைசாமி,தலைவர்:வார்டுகளில் நடக்கும் பணிகள் குறித்து அந்தந்த வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். பலமுறை கூட்டத்தில் கூறியும் நடவடிக்கை இல்லை. கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான திட்டங்கள் குறித்து அவர்களுடைய லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்தால் தீர்மானத்தில் வைக்கப்படும்.
தேவி,கவுன்சிலர்,( தி.மு.க.,): எனது வார்டில் எந்தப் பணிகளும் செய்யவில்லை. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளால் சாக்கடைகள் பெயர்ந்து விழுந்து கழிவு நீர் தேங்குகிறது.
தலைவர் : உங்கள் வார்டில் திட்டப் பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.