/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேச்சு
/
பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேச்சு
பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேச்சு
பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேச்சு
ADDED : ஆக 01, 2024 05:23 AM
திண்டுக்கல்: ''பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் செய்வதாக,''பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி கூறினார்.
திண்டுக்கல்லில் சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,க்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பு, பட்ஜெட் விளக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை என தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தவறான, பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறது.
தமிழக பட்ஜெட்டில் 9 மாவட்டங்களில் பெயர்கள் ஏன் இடம் பெறவில்லை என்பதற்கு முதல்வர் முதலில் விளக்கம் அளிக்க வேண்டும். தேசிய வளர்ச்சி கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று அந்த மாநிலத்துக்கான தேவையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு வெளி நடப்பு செய்திருக்கிறார்.
அதுபோன்ற வகையில் கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருக்கிறார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 68 பேர் உயிரிழந்ததை அடுத்து தனது மகனான அமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.
அதே போன்று தேசிய வளர்ச்சிக் கூட்டத்துக்கும் உதயநிதியை அனுப்பி தமிழகத்தின் கோரிக்கையை பதிவு செய்திருக்கலாம்.
லோக்சபாவை கேலிக்குறியதாக மாற்றி வரும் ராகுலை பின் தொடரும் தி.மு.க,, பேச வேண்டிய இடத்தில் பேசுவதையும், சுட்டிக் காட்ட வேண்டிய கருத்துக்களை சுட்டிக் காட்டாமலும் எதிர்ப்பை முறையாக பதிவு செய்ய தவறி இருக்கிறது.
3 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய நிதி ஒதுக்கீடுகளுக்கான வரவு செலவு அறிக்கையை தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைப்பதற்கு மத்திய அரசு மீது அவதுாறு பரப்பி வருகிறது தி.மு.க., என்றார். கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார்.