ADDED : செப் 07, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கலைஞர் நுாற்றாண்டு விழா,கட்சியின் 75-ம் ஆண்டு பவள விழா, கட்சி கொடியேற்று விழா என முப்பெரும் விழா மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் நடந்தது.
தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ராஜா, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குருசாமி, ராதாகிருஷ்ணன், சுப்புலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் தேவேந்திரன் வரவேற்றார்.
பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் கொடியேற்றினார்.