/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் தி.மு.க.,
/
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் தி.மு.க.,
ADDED : மார் 05, 2025 06:36 AM

ஒட்டன்சத்திரம்: ''மக்களின் வரிப்பணத்தை தி.மு.க., அரசு வீணடிப்பதாக,'' அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அ.தி.மு.க., சார்பில் புலியூர்நத்தத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெ பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :
மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாக கூறினர். இதுவரை ரத்து செய்யவில்லை. அதே போல் நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை. அரிசி, பருப்பு உட்பட அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து விட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா கொண்டாடிய போது 32 மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்களின் வரிப்பணம் அவர்களுக்கே கிடைக்கும்படி செய்தோம். கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை அவருடைய சிலைகளை நிறுவி மக்களின் வரிப்பணத்தை தி.மு.க., அரசு வீணடித்து வருகிறது, என்றார்.கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி. நடராஜ் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி வரவேற்றார். மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ. பழனிவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் கே.கே. கருப்புசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.முருகேசன், நகரச் செயலாளர் எஸ்.நடராஜன், பேரூர் செயலாளர் இ.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் கே.பி.வி.மனோகரன் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு துணை செயலாளர் பாண்டியராஜன், பாபு கலந்து கொண்டனர். ஐ.டி. விங்க் மாவட்ட துணைத் தலைவர் சீராபாலா நன்றி கூறினார்.