/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க., ஊர்வலம்,ஆர்ப்பாட்டம்
/
மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க., ஊர்வலம்,ஆர்ப்பாட்டம்
மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க., ஊர்வலம்,ஆர்ப்பாட்டம்
மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க., ஊர்வலம்,ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2025 06:25 AM

திண்டுக்கல்: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் ஊர்வலம் நடந்தது.
அண்ணாதுரை சிலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் ஏ.எம்.சி. ரோடு வழியாக ஸ்கீம் ரோட்டில் உள்ள திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் முடிந்தது . அங்கு ஆர்ப்பாட்டமும் நடந்தது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். அவைத் தலைவர் காமாட்சி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பிலால் உசேன், நாகராஜன், மார்கிரேட் மேரி பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.இந்தியா மாணவர் சங்க மாவட்ட தலைவர் நிரூபன், அனைத்திந்தய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் தினேஷ், காங்.,மாணவர் சங்க தலைவர் ஜீவானந்தம், ம.தி.மு.க., மாணவரணி மாவட்ட தலைவர் கண்ணன் பேசினர். மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாநகர நிர்வாகிகள் முகமது இப்ராகிம், அழகர்சாமி, பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.
மேற்கு மாவட்ட தி.மு.க.,
வேடசந்துார்: வேடசந்துார், ஒட்டன்சத்திரம், நத்தம் தாலுகாக்களை உள்ளடக்கிய திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி ,இளைஞர் அணி சார்பில் ஆத்து மேட்டில் ஊர்வலம் துவங்கியது. மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். சாலைத்தெரு வழியாக தபால் நிலையத்தின் முன்பு வந்த நிலையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, சீனிவாசன் ராஜலிங்கம், சுப்பையா, பாண்டி,நகர செயலாளர்கள் கார்த்திகேயன், கதிரவன், செந்தில்குமார், கருப்பன் கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் , மாணவர் அணி தினேஷ் குமார், சிவா பங்கேற்றனர்.