/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கர்ப்பிணிகளுக்கு தி.மு.க., நல உதவி
/
கர்ப்பிணிகளுக்கு தி.மு.க., நல உதவி
ADDED : மார் 05, 2025 06:34 AM

வடமதுரை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., சார்பில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தென்னம்பட்டியில் 1000 பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. காணப்பாடி மாலப்பட்டியில் பயணியர் நிழற்குடை, தென்னம்பட்டியில் அங்கன்வாடி, ரேஷன் கடை கட்டட திறப்பு விழாக்களும் நடந்தன. காந்திராஜன் எம்.எல்.ஏ., நல திட்ட உதவி வழங்கி, கட்டடங்களை திறந்து வைத்தார்.
ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார், பி.டி.ஓ., சுப்பிரமணி, கூட்டுறவு அதிகாரிகள் அன்பரசன், சாந்தி, பேரூராட்சி தலைவர் கருப்பன், தி.மு.க., இலக்கிய அணி இளங்கோ, நெசவாளரணி சொக்கலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் சுப்பையா பங்கேற்றனர்.