/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எதையுமே செய்யாத தி.மு.க., எம்.பி.,: எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் காட்டம்

ADDED : மார் 24, 2024 05:54 AM
திண்டுக்கல் : ''திண்டுக்கல் தொகுதியில் எதையுமே செய்யாது எம். பி.,யாக தி.மு.க.,வை சேர்ந்த வேலுச்சாமி இருந்துள்ளார்,'' என அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகம்மது முபாரக் பேசினார்.
திண்டுக்கல் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ., திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப பொதுச்செயலாளர் பழனிசாமி திண்டுக்கல் தொகுதிக்கு என்னை வேட்பாளராக அறிமுகம் செய்து உள்ளார்.
இங்கு நான் வேட்பாளர் அல்ல. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தான் வேட்பாளர்.
நான் வெற்றி பெற்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புவேன். தற்போதைய தி.மு.க., எம். பி., திண்டுக்கல் தொகுதிக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அவர்தான் தேஜஸ் ரயிலை திண்டுக்கல்லில் நிறுத்தம் செய்ததாக கூறி உள்ளார். அவர் தேஜஸ் ரயிலை மட்டுமல்ல திண்டுக்கல் தொகுதியின் வளர்ச்சி என்ற திட்டத்தின் ரயிலையே நிறுத்திவிட்டார். அந்த வளர்ச்சி திட்டங்களுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. அதனை திறப்பதற்கான சாவியாக நான் செயல்படுவேன் என்றார்.