/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாய்கடி; 2023ல் 14,000, 2024ல் 5000
/
நாய்கடி; 2023ல் 14,000, 2024ல் 5000
ADDED : மே 16, 2024 05:43 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 2023ல் 14,000, 2024ல் 5000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை சிகிச்சையில் பெற்றுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. டூவீலர் வாகன ஓட்டிகள்,நடந்து செல்லும் பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது.
உணவு கிடைக்காமல் பசியோடு சுற்றி திரிவதால் எந்நேரமும் கோபத்துடனே இருக்கின்றன. இந்த நேரங்களில் குறைந்தளவு உணவுகள் கிடைத்தால் நாய்கள் ஒன்றோடொன்று ஒன்று மோதி மக்களை அச்சுறுத்துகின்றன.
கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சிகள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு பிடித்த இடத்திலே விட்டு செல்கின்றனர். சில நேரங்களில் நகர் பகுதிகளில் பிடித்து கிராம பகுதிகளில் விட்டு செல்கின்றனர். இதனால் கிராமங்களிலிருக்கும் கோழிப்பண்ணைகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ரோட்டில் செல்பவர்களை நாய்கள் கடிக்கின்றன.
அந்த வகையில் 2023ல் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 2024ல் தற்போது வரை 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.