ADDED : ஆக 04, 2024 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், 'தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷன், தி மெட்ராஸ் கெனைன் கிளப், தி சேலம் அக்மி கென்னல் கிளப்' சார்பில் நாய் கண்காட்சி நேற்று துவங்கியது.
இரு தினங்கள் நடக்கும் கண்காட்சியில் நாடு முழுதுமிருந்து, 424 நாய்கள் பங்கேற்றன.
பாக்சர், டோபர்மேன், கிரேடன், செர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்சன்ட், பிகில், ஆப்கான் கவுன்ட், டாய் பொமோரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, சிப்பிபாறை, ராஜபாளையம், ஹஸ்கி உள்ளிட்ட 60 வகையான நாய்கள் இடம் பெற்றன.
பல்வேறு பிரிவுகளில் நாய்களுக்கான தேர்வுகள் நடந்தன. வெளிநாடு, உள்நாட்டை சேர்ந்த வல்லுனர்கள் நடுவர்களாக இருந்தனர்.
கண்காட்சியில், சென்னையை சேர்ந்த தர்ஷாவின், 'சுர்ரோ' சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.