/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் குறுக்கிடும் நாய்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர் ஓட்டிகள்
/
ரோடுகளில் குறுக்கிடும் நாய்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர் ஓட்டிகள்
ரோடுகளில் குறுக்கிடும் நாய்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர் ஓட்டிகள்
ரோடுகளில் குறுக்கிடும் நாய்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர் ஓட்டிகள்
ADDED : பிப் 22, 2025 06:13 AM

பழநி: நாய் தொல்லையால் பழநி மக்கள் வீதிகளில் நடமாட முடியாமல் அச்சத்துடன் உள்ளனர். மேலும் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கின்றனர்.இதோடு ரோடுகளில் குறுக்கிடும் நாய்களால் டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் தொடர்கிறது .
பழநி நகராட்சி பகுதியில் நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் தெருக்களில் சுற்றி திரிகின்றன. இரவு பணி முடிந்து டூவீலர், நடந்து வரும் நபர்களை குறி வைத்து கடிக்கப் பாய்கிறது. அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட வரும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக வீட்டு வாசலில் கூட்டமாக படுத்து கிடக்கின்றன. இவற்றை அகற்ற பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் தனியாக விளையாட வரும்போது குழந்தைகளை சுற்றி வளைத்து கடிக்கிறது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுக்கிடும் நாய்கள்
மனோகரன், இன்சூரன்ஸ் முகவர், பழநி : பகல் நேரங்களில் நாய்கள் தெருக்களிலும், சாலைகளிலும் திரிகின்றன. பெரும்பாலும் தெரு நாய்கள் நோய் தொற்றுகள் சுற்றி திரிவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. டூவீலரில் செல்லும்போது விபத்தை ஏற்படுத்தும் வகையில் நாய்கள் தெருக்களில் குறிக்கிடுகிறது.
மன உளைச்சல் தருகிறது
சுரேஷ், பேன்சி ஸ்டோர், பழநி : தெருக்களில் கட்டுப்பாட்டின்றி நடமாடுகின்றன. முக்கிய சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடக்கிறது. காலை நேரத்தில் நடை பயிற்சிக்கு செல்லும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. நடைப்பயிற்சிக்கு செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டு வரும்போது நாய்கள் தொல்லையால் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது.
தீர்வு
கால்நடைத்துறை ,நகராட்சி இணைந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். கருத்தடை செய்யும் கால இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் நோய் தொற்று உடைய நாய்களுக்கு தகுந்த தடுப்பூசிகளை உரிய நேரத்தில் அளிக்க வேண்டும். இறைச்சி கடை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதை கடைப்பிடிக்க வேண்டும். இதை நகராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.