/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துரத்தும் நாய்கள்... கடிக்கும் கொசுக்கள் பரிதவிப்பில் ராம்நகர் குடியிருப்போர்
/
துரத்தும் நாய்கள்... கடிக்கும் கொசுக்கள் பரிதவிப்பில் ராம்நகர் குடியிருப்போர்
துரத்தும் நாய்கள்... கடிக்கும் கொசுக்கள் பரிதவிப்பில் ராம்நகர் குடியிருப்போர்
துரத்தும் நாய்கள்... கடிக்கும் கொசுக்கள் பரிதவிப்பில் ராம்நகர் குடியிருப்போர்
ADDED : ஜூலை 04, 2024 02:16 AM

திண்டுக்கல்: சீரமைக்கப்படாத சாக்கடைகள்,சேதமான ரோடுகள்,மழை நேரங்களில் ரோட்டில் ஓடும் கழிவுநீர்,எங்கு பார்த்தாலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள்,கடித்து குதறும் கொசுக்கள் என ஏராளமான பிரச்னைகளில் ராம்நகர் மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.
திண்டுக்கல் ராம்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜசேகரன்,பொருளாளர் சேக்முஜிபுர் ரகுமான், செயலாளர் சந்திரசேகர், இணை செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:திண்டுக்கல் ரவுண்ட்ரோடு முல்லைதெரு,மல்லிகை தெரு,தாமரை தெரு,ரோஜாதெரு உள்ளிட்ட தெருக்களை கொண்டது ராம்நகர். இப்பகுதிகளில் ரோட்டோரங்களில் அதிகாலையில் முதியவர்கள், சிறுவர்கள்,பெண்கள் நடை பயிற்சி மேற்கொள்ள முடியாத அளவிற்கு தெரு நாய்கள் அச்சுறுத்துகின்றன. டூவீலர்,கார்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துகின்றன. சில நேரங்களில் வெறி பிடித்து கடிக்கின்றன. மாநகராட்சியில் புகார் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். ரோடுகள் நடக்க முடியாத அளவிற்கு சேதமாகி கிடப்பதால் பெண்கள்,வயதானவர்கள் நடக்க முடியாமல் திணறுகின்றனர். டூவீலர்களில் செல்வோரும் குண்டும் குழியுமான பகுதிகளில் தடுமாறி விழுகின்றனர். மழை நேரங்களில் சொல்ல முடியாத அளவிற்கு பாதாள சாக்கடை கழிவு நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை பாடாய் படுத்துகிறது. மழை நேரங்கள் வந்தாலே இரவு முழுவதும் மக்கள் துாங்காமல் அவதிப்படுகின்றனர். இதுதவிர சாக்கடைகளும் முறையாக பராமரிக்கப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி ரோட்டில் ஓடும் நிலை உள்ளது. மாநகராட்சி குடிநீர் வாரத்திற்கு இரு முறை வழங்குவதால் குடிநீர் தட்டுப்பாடும் அவ்வப்போது உள்ளது. குப்பை தொட்டிகள் பல இடங்களில் இல்லாமல் இருப்பதால் ரோடெங்கும் குப்பை சிதறி சுகாதார சீர்கேடாக உள்ளது. இரவில் மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கொசுக்கள் மக்களை கடித்து துன்புறுத்துகின்றன.
மாநகராட்சி நிர்வாகத்தினர் சுணக்கம் காட்டுகின்றனர். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிறைவேற்றித்தரவேண்டும். கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும். கழிவுநீர் முறையாக செல்லவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.