/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பணப்பலன் வழங்காது இழுத்தடிப்பு துாய்மை பணியாளர்கள் கண்ணீர்
/
பணப்பலன் வழங்காது இழுத்தடிப்பு துாய்மை பணியாளர்கள் கண்ணீர்
பணப்பலன் வழங்காது இழுத்தடிப்பு துாய்மை பணியாளர்கள் கண்ணீர்
பணப்பலன் வழங்காது இழுத்தடிப்பு துாய்மை பணியாளர்கள் கண்ணீர்
ADDED : ஆக 22, 2024 03:53 AM

திண்டுக்கல்; திண்டுக்கல் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் ஓய்வு பெற்று சில ஆண்டுகளை கடந்தபோதிலும் மாநகராட்சி நிர்வாகம் பணப்பலன்களை வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதனால் அவர்கள் தினமும்மாநகராட்சி அலுவலகம் வந்து அதிகாரிகளிடம் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் சுத்தப்படுத்தும் பணியில் 130 நிரந்தர,300க்கு மேலான தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஓய்வு பெற்ற பலருக்கும் மாநகராட்சி நிர்வாகம் இன்னும பணப்பலன் வழங்காமல் உள்ளது.
கஷ்டமான நிலையில் உள்ள அவர்கள் தினமும் குடும்பத்தோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் கோரி வருகின்றனர். அதிகாரிகளும் அந்த நேரத்தில் வழங்குகிறோம் என கூறி விட்டு அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மவுனமாக உள்ளனர். இதே நிலை ஆண்டுக்கணக்கில் தொடர்ந்ததால் பணப்பலன்கள் பெற வேண்டிய ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் சிலர் உடல் நலம் சரியில்லாமல் இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களின் பணப்பலன்களை வாங்குவதற்காக அவர்களது வாரிசுகளும் மாநகராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று 10க்கு மேலான ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். கமிஷனர் ரவிச்சந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு வாரத்திற்குள் பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி கலைந்து சென்றனர்.
நெட்டுத்தெருவை சேர்ந்த ஓய்வு துாய்மை பணியாளர் பார்வதி கூறுகையில், ''30 ஆண்டுகளுக்கு மேலாக துாய்மை பணியாளராக பணியாற்றி 2023ல் ஓய்வு பெற்றேன். ரூ.10 லட்சத்திற்கு மேல் பணப்பலன்கள் வழங்க வேண்டும்.
வேண்டுமென்றே எங்களை இழுத்தடிக்கின்றனர். என்னை போன்ற ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்கள் பலருக்கும் பணப்பலன்கள் கிடைக் காததால் குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கிறோம். மாவட்ட நிர்வாகம்தான் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.