ADDED : ஆக 15, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவக் கழக கிளை, சன் சட்டில் கிளப் சார்பாக இரட்டையர் இறகு பந்து போட்டி நடந்தது.
கிளப் சேர்மன் மணி விஜயன் தொடங்கி வைத்தார். கவுதம் விஸ்வநாத், வெங்கடேஷ் முதல் பரிசையும், ஷேக்பரீத், திருப்பதி இரண்டாம் பரிசையும், ஸ்டீபன், கார்த்திக் மூன்றாம் பரிசையும் வென்றனர். ஐ. எம். ஏ., கிளை துணைத் தலைவர் முத்துசாமி, செயலாளர் ஆசைத்தம்பி பரிசுகளை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், முன்னாள் கூட்டுறவு துணை பதிவாளர் டேனியல் பேசினர். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பாளர் சவுந்தரராஜன் போட்டிகளை நடத்தினார்.