/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுப்பு
/
பெண் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுப்பு
ADDED : மார் 01, 2025 04:41 AM
திண்டுக்கல் திண்டுக்கல்லில் இளம்பெண் சந்தேக முறையில் வீட்டில் இறந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்த அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
திண்டுக்கல் சீலப்பாடி பொதுப்பணித்துறை காலனியை சேர்ந்தவர் சிவபாலன்28. இவரது மனைவி கிருஷ்ணவேணி22. இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கிருஷ்ணவேணி தலையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது இறந்தது தெரிந்தது.
தாலுகா போலீசார் விசாரித்த நிலையில் கிருஷ்ணவேணி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து கிருஷ்ணவேணி உடலை பெற்று கொண்டனர்.