ADDED : ஆக 02, 2026 08:13 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ஆந்திரா மாநிலம் சித்துார் மணி 30.
இவர் சரக்குவேனில் ஆந்திராவில் இருந்து தக்காளி பெட்டிகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி சென்றார். நேற்று அதிகாலை தோமையார்புரம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது சரக்குவேன் மோதி விபத்து நடந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர் பலியானார். தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மணியின் உடலை மீட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
