/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்துார் மலைப்பகுதிகளில் வறட்சி; கிராமங்களில் புகும் காட்டு மாடுகள்

ADDED : ஏப் 09, 2024 12:33 AM
வடமதுரை : வடமதுரை அருகே தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகும் காட்டு மாடுகளால் புத்துார் ஊராட்சி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புத்துார் ஊராட்சியையொட்டி முடிமலை, பண்ணமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சியால் நீருற்றுகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.
இதனால் நீர், உணவு தேடி மலைப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள், வீடுகளை தேடி இறங்கி வருகின்றன. பயிர்களை தின்பதால் விவசாயிகளும் பாதிக்கின்றனர். இதை விரட்ட முயலும் பொதுமக்கள் தாக்கப்படுவதும் உண்டு.
அய்யலுார் வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால வன உயிரினங்கள் நீர் இருக்கும் இடங்களை தேடி வருகின்றன. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
வன விலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு அரசு துறை மூலம் சான்று பெற்று வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படும். வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது'என்றனர்.