/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதையில்லா விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதையில்லா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 13, 2024 05:47 AM
திண்டுக்கல் : மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள், அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஊர்வலங்கள் நடந்தன.
திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சக்திவேல், ஏ.எஸ்.பி., சிபின் துவக்கி வைத்தனர்.
*திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டீன் சுகந்திராஜகுமாரி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு,நிலைய அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். மனநல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் உமாதேவி,மனநல மருத்துவர் டீன்வெஸ்ஸி பேசினர். டாக்டர்கள் காமராஜ்,நிரஞ்சனா தேவி பங்கேற்றனர்.
* எம்.வி.எம்., கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில் இளங்கோ முன்னிலை வகித்தார்.
*திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் புறநகர் டி.எஸ்.பி., உதயகுமார் தலைமை வகித்தார்.
* நாகல்நகர் சவுராஸ்டிரா வரதராஜா உயர்நிலைப்பள்ளியில் பள்ளித் தாளாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
நிர்வாக அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

