/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வறண்டது கோடைகால நீர்த்தேக்கம் பழநியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
/
வறண்டது கோடைகால நீர்த்தேக்கம் பழநியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
வறண்டது கோடைகால நீர்த்தேக்கம் பழநியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
வறண்டது கோடைகால நீர்த்தேக்கம் பழநியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
ADDED : மே 03, 2024 06:32 AM

பழநி: பழநி நகராட்சி பகுதிக்கான குடிநீர் ஆதாரமான கோடைகால நீர்த்தேக்கம் வறண்டு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
பழநி நகராட்சி அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய கோடைகால நீர்த்தேக்கம் உள்ளது. 25 ஏக்கருக்கு மேல் உள்ள இந்த நீர்த்தேக்கம் மூலம் மின் மோட்டார் இன்றி நேரடியாக பழநி நகருக்கு குழாய் மூலம் தண்ணீர் வருகிறது.
கோடைகால நீர்த்தேக்கத்தில் தண்ணீர் முற்றிலும் வறண்டு உள்ளதால் பழநி நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகும். கோடைகால நீர்த்தகத்தில் குட்டை போல் சிறிதளவு தண்ணீர் உள்ளதால் வெப்பத்தால் மீன்கள் இறந்து விடுகின்றன.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் பழநி நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.