/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் துளிர் விட்ட காய்ந்த தேக்கு மரக்கன்றுகள்
/
மழையால் துளிர் விட்ட காய்ந்த தேக்கு மரக்கன்றுகள்
ADDED : ஜூன் 09, 2024 04:10 AM

வேடசந்துார், : அழகாபுரி அலைபகுதியில் காய்ந்துபோன 5000 மரக்கன்றுகள் மீண்டும் பெய்த தொடர் மழையால் துளிர் விட்டு கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கின்றன.
வேடசந்துார் அழகாபுரியில் குடகனாற்றின் குறுக்கே குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் வலது புற முன்பகுதி காலி நிலத்தில் வனத்துறை சார்பில் 5000 தேக்கு கன்றுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நட்டு பராமரிக்கப்பட்டது. இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியால் மரக்கன்றுகள் காயத் துவங்கின. இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு பாதுகாக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அனைத்து மரக்கன்றுகளும் காய்ந்து கருகத் துவங்கின. இந்த மரங்களின் நிலை இனி அவ்வளவுதான் என அனைவரும் நினைத்தனர்.
இந்நிலையில் ஒரு மாதமாக பெய்த தொடர் மழை காரணமாக 90 சதவீத மரக்கன்றுகள் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிக்கின்றன. காய்ந்த நிலையில் இருந்த மரக்கன்றுகளை பார்த்து பரிதாப பட்ட மக்கள் தற்போது மகிழ்ச்சி பொங்க நின்று பார்த்து செல்கின்றனர்.