/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த பீன்ஸ், அவரை போட்டி போட்டு வாங்கும் வியாபாரிகள்

ADDED : மே 15, 2024 05:41 AM
ஒட்டன்சத்திரம் : வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ், அவரை விலை அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் , சுற்றிய பகுதிகளில் விளையும் பீன்ஸ், அவரை தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
வறட்சி காரணமாக இதன் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு ஒரு சில மூடைகளே விற்பனைக்கு வருகிறது.
தேவை அதிகமாக இருப்பதால் இவை இரண்டையும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இதனால் விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 80 க்கு விற்ற பீன்ஸ் ரூ .130 , ரூ.90 க்கு விற்ற அவரை ரூ.130 க்கு விற்பனையாகிறது.
வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் தொடங்குவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.