sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொட்டிக்கிடக்கும் குப்பை; கொசுக்கள் உற்பத்தி ஜோர் வசதிக்காக ஏங்கும் திண்டுக்கல் 9வது வார்டு மக்கள்

/

கொட்டிக்கிடக்கும் குப்பை; கொசுக்கள் உற்பத்தி ஜோர் வசதிக்காக ஏங்கும் திண்டுக்கல் 9வது வார்டு மக்கள்

கொட்டிக்கிடக்கும் குப்பை; கொசுக்கள் உற்பத்தி ஜோர் வசதிக்காக ஏங்கும் திண்டுக்கல் 9வது வார்டு மக்கள்

கொட்டிக்கிடக்கும் குப்பை; கொசுக்கள் உற்பத்தி ஜோர் வசதிக்காக ஏங்கும் திண்டுக்கல் 9வது வார்டு மக்கள்


ADDED : ஆக 18, 2024 05:38 AM

Google News

ADDED : ஆக 18, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : பராமரிக்கப்படாத பொதுக்கழிப்பறை, ரோடு உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாதெருக்கள் , சிசிடிவி கேமரா இல்லாததால் அச்சம்,துார்வாரப்படாத சாக்கடைகள் .கொட்டிக்கிடக்கும் குப்பை ,கொசுக்கள் உற்பத்தி ஜோர் என பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 9வது வார்டு மக்கள்.

கோவிந்தாபுரம் 1,2,3 குறுக்கு தெருக்கள், அருணாநகர், நந்தவனம் ரோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வர்டில் பிரதான ரோடுகள் நன்றாக இருந்தாலும் குறுக்குத் தெருக்கள் படுமோசமாக உள்ளன. கோவிந்தாபுரம் 1 வது சந்து ரோடு படுமோசமாக உள்ளது. நடந்து செல்வது கூட சிரமம்என்ற சூழல்தான் நிலவுகிறது. கழிவு நீரும் தேங்கியிருப்பது மக்களை அல்லல்பட வைக்கிறது. சாக்கடைகள் பல இடங்களில் துார்வாரப்படாமல் உள்ளன. இதனால் மழை பெய்தால் கழிவுநீரும்ரோட்டிற்கு வந்து விடுகிறது. மாநகராட்சி பணியாளர்களால் காலையில் வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டாலும்தெருவில் கொட்டப்படும் குப்பையை எவரும் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தெருவிலும் குப்பை கொட்டிக்கிடக்கின்றன.கொசுக்கள் விடாது கடிப்பது இப்பகுதியில் தொடற் கதையாக உள்ளது. கொசு மருந்து அடிப்பதே இல்லை . நாய்கள், கால்நடைகளால் அச்சம் உள்ளது. தெருக்களை சுற்றி எந்த இடத்திலும் சிசிடிவி கேமரா இல்லை. அவ்வப்போது செயின் பறிப்பு, அந்நிய நபர்களின் உலா என அச்சத்தோடு இருக்க வேண்டியுள்ளது தான் வார்டில் பிரதான பிரச்னையாக உள்ளது . அதோடு இப்பகுதியினர் பயன்படுத்தும் பொதுக்கழிப்பறைபராமரிப்பின்றி உள்ளது. 4 நாட்கள் தண்ணீர் வருவதில்லை. அனைவர் வீட்டிலும் கழிப்பறை இல்லாததால் பலருக்கு பயன்படுக்கூடிய இந்த கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும் .

பொதுக்குழாய்கள் இல்லை


மாலதி, கோவிந்தாபுரம்: பொதுக்குழாய் என்பது இல்லை. வீட்டு குழாய்களில் வரும் தண்ணீர் மட்டும்தான் உள்ளன. சில இடங்களில்உள்ள தண்ணீர் தொட்டிகளும் பயன்பாடற்று கிடக்கிறது. கொசுத்தொல்லையால் குழந்தைகள்அவதிப்படுகின்றனர். அவ்வப்போது கொசுமருந்து அடிப்பதோடு தேங்கி நிற்கும் கழிவுநீரிலும் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கழிப்பறையை பராமரியுங்க


செல்வா, நகர துணைத் தலைவர், பா.ஜ., : இப்பகுதியில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே பொதுக்கழிப்பறைகள்உள்ளன.

ஆனால் அவற்றை முறையாக பராமரிக்க மாட்டேன் என்கின்றனர். வாரத்திற்கு 2 நாட்கள் தண்ணீர் வருகிறது மற்றநாட்களில் வருவதில்லை. இதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. சாக்கடைகளை துார்வார வேண்டும். மழைக்காலம் தொடங்கி விட்டது. மழைநீரோடு கழிவுநீரும் ரோட்டிற்கு வந்தால்நோய்தொற்று அபாயம் ஏற்படும்.

கட்டாயம் தேவை சிசிடிவி


ராகேஷ், நந்தவனம் ரோடு : சிசிடிவி கேமராக்கள் அமைக்க அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். இரவு நேரங்களில் அந்நியர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. செயின் பறிப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. அவ்வப்போது போலீசார் ரோந்து வர வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதோடு , குப்பை அள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தேவை நடவடிக்கை


சாந்தி, கவுன்சிலர், (தி.மு.க.,) : வார்டைப் பொறுத்தவரை தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுக்கழிப்பறை சேதமடைந்துள்ளதால் புதிதாக கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கப்பட்டதும் அதற்கான பணிகள் தொடங்கும். குப்பையை வீடுகளில் முறையாக துாய்மை பணியாளர்கள் பெற்று விடுகின்றனர். தெருவில் கொட்டுவது வெளிபகுதியினர் தான். அவ்வழியே செல்வோர் துாக்கி வீசி செல்கின்றனர். பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருப்பதோடு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us