/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்களுக்கு படிப்பு முக்கியம்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அறிவுரை

ADDED : ஆக 09, 2024 12:53 AM

திண்டுக்கல் : '' மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் ரோடு வசதி இல்லாததால் தேசிய தரமதிப்பீட்டுக் குழு ஆய்வை கருதி ரோடை சரி செய்து தரக்கோரி கல்லுாரி நிர்வாகம் சார்பில் முன்னாள் அமைச்சரான சீனிவாசன் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அவரது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் 41 .30 லட்சத்தில் தார்ரோடு , பேவர் பளாக் கற்களும் பதிக்கப்பட்டன. இதனை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது கல்லுாரி நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் பேசுகையில்,'' திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லுாரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
படித்த உடன் வேலை என தனியார் கல்லுாரியில் படித்த மாணவிகளுக்கு படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்துவிடுகிறது, இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துவிடுகின்றனர். மாணவர்களுக்கு படிப்புதான் முக்கியம் என்றார்.