/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் மண் அரிப்பை தடுக்கும் காலி மது பாட்டில்கள்
/
'கொடை'யில் மண் அரிப்பை தடுக்கும் காலி மது பாட்டில்கள்
'கொடை'யில் மண் அரிப்பை தடுக்கும் காலி மது பாட்டில்கள்
'கொடை'யில் மண் அரிப்பை தடுக்கும் காலி மது பாட்டில்கள்
ADDED : மே 06, 2024 01:02 AM

கொடைக்கானலில் சுற்றுவட்டார பகுதிகளில் வீசப்படும் காலி மது பாட்டில்களை சேகரித்து அவற்றை தோட்டத்தில் மண் அரிப்பு ஏற்படாத வகையில் வரிசையாக அடுக்கி வைத்து தடுப்புச் சுவர் எழுப்பி தொழிலாளி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கொடைக்கானலை சேர்ந்தவர் செல்வநாதன் 67. இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூங்கா,காய்கறி தோட்டங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
ஆண்டுதோறும் தான் பணி செய்யும் தோட்டங்களில் புதுமையை இயற்கையோடு ஒத்து செய்வதை வழக்கமாக கையாண்டு வருவது வழக்கம். மதுவால் போதை ஏறிய நபர்கள் அவற்றை துார வீசுவதால் மனிதர்களுக்கும், வனவிலங்கு, கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வெறுமனே வீசப்படும் காலி மது பாட்டில்களை கொடைக்கானலில் உள்ள விடுதிகளின் மூலம் சேகரிப்பதும், துாய்மை பணியாளர்கள் மூலம் சேகரித்து கடந்த 2 ஆண்டுகளாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மது பாட்டில்கள் மூலம் இரண்டு வரப்புகளில் கோட்டைச் சுவரை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் தோட்டத்தின் வெளிப்பகுதி அழகுற காட்சியளிப்பதும், அதே நிலையில் மண் அரிப்பு தடுப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இந்த பாட்டில் தடுப்புச்சுவர்களை அமைந்துள்ளார்.
இயற்கை விழிப்புணர்வு
செல்வநாதன்,தொழிலாளி,கொடைக்கானல்: பலஆண்டுகளாக தோட்ட பராமரிப்பு,பூங்காக்களை பராமரிக்கின்றேன்.
இவற்றில் புதுமை புகுத்த வேண்டும் என்ற நோக்கில் வீணாகும் பீர் மது பாட்டில்களை சேகரித்து அதனுள் சலித்த மண்ணை நிரப்பி அவற்றை வரப்பில் ஒரு அடி சுவராக காட்டியுள்ளேன். பாட்டிலில் மண் நிரப்புவதால் எளிதில் பாட்டில் உடைவதில்லை. இரு வரப்புகளில் இதுவரை 5 ஆயிரம் பாட்டில் அடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை மேலும் அதிகரிக்க தற்போது 5 பாட்டில்கள் சேகரித்து மேலும் 2வரப்புகளில் தடுப்பு சுவர் எழுப்ப உள்ளேன். சுற்றுச்சூழலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற பணியை செய்கிறேன்.
மண் நிரப்பு பணி மட்டும் 4 மாதத்தில் நிறைவடையும் சில தினங்களில் இந்த சுவர் வடிவமைக்கப்படும். இதன் மூலம் அழகிய மது பாட்டில் சுவர் பாதுகாப்புடன் வடிவமைக்கப்படுகிறது.