ADDED : மார் 07, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : பாடியூரில் ஊராட்சி அலுவலகம் எதிரே தெருவின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று திரும்ப முடியாத நிலை இருந்தது.
அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து துணை பி.டி.ஓ., முகமது இஸ்மாயில், ஆர்.ஐ., சல்மா, வி.ஏ.ஓ., தேன்மொழி முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.