தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுற்றுச்சூழல் முகாம்

சுற்றுச்சூழல் முகாம்

சுற்றுச்சூழல் முகாம்


ADDED : ஜூலை 24, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம், ஜூலை 24-நத்தம் என்.பி.ஆர்., கலை,அறிவியல் கல்லூரி சார்பாக

பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கும் சுற்றுச்சூழல் முகாம் நடந்தது.

நத்தம் என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்கள் 195, 196 மற்றும் நத்தம் வனத்துறையினர் இணைந்து நத்தம் அருகே குடகிப்பட்டி அய்யனார் அருவி மற்றும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கும் சுற்றுச்சூழல் முகாம் நடைபெற்றது.

வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் பணி காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடந்தது. மாணவர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு அருவி மற்றும் வனப்பகுதியில் குவிந்திருந்த 100 கிலோவிற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு என்.பி.ஆர்., கலை,அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆ.சிவக்குமார்,துணை ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக வனச்சரக அலுவலர்கள் புவியரசன்,பூபாலன்,நத்தம் வனச்சரகத்தை சேர்ந்த பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us