ADDED : செப் 11, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : எரியோடு ச.புதுார் ஸ்ரீ சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன், வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்றுமுன்தினம் மாலை புனித தீர்த்தம், முளைப்பாரியுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
எ.குரும்பபட்டி வரதராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமிகார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீராசாமிநாதன், சுப்பையன், நகர செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.

