/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இடமாற்றம் செய்தும் அடம் பிடிக்கும் போலீசார்
/
இடமாற்றம் செய்தும் அடம் பிடிக்கும் போலீசார்
ADDED : ஆக 19, 2024 01:10 AM
தாண்டிக்குடி: கொடைக்கானல்,தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் இடமாற்றம் செய்த போலீசார் புதிய பணியிடங்களுக்கு செல்லாத நிலை உள்ளது.
மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த போலீசாரை இடமாற்றம் செய்து திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் ஆக.8-ல் உத்தரவிட்டார்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பணியிலிருந்தவர்கள் இங்கிருந்து இடமாற்றத்தில் செல்ல தயக்கம் அடைந்து தற்போதுள்ள இடத்தை தக்க தக்க வைத்துக் கொள்ள சிலர் ஆளுங்கட்சி பிரமுகர்ளை அணுகுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க அறிவுறுத்தல் விடுத்தும் பழைய நிலையே தொடர்கிறது.
குறிப்பாக தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் பல ஆண்டு பணி புரியும் தனிப்பிரிவு போலீஸ் மீது தொடர் புகார்கள் வந்தபோதும் இடமாற்றம் செய்யாமல் அதிகாரிகள் மவுனம் காத்தனர். இடமாற்றம் செய்தும் புதிய பணியிடத்திற்கு செல்லாத நிலை உள்ளது. திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

