நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : சுக்காம்பட்டி வளவிசெட்டிபட்டி வேலக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாலை தாண்டுதல் விழா நடந்தது.
திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுவாமி மாடுகள் கொண்டு வரப்பட்டது.
ஊர் மக்கள் சார்பாக வரவேற்பு அளித்து, கோயில் முன்பாக வரிசையாக மாடுகளை நிறுத்தி புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் காளை மாடுகள் 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைச்சுவாமி கோயில் அழைத்து செல்லப்பட்டது.
அங்கு சிறப்பு அபிஷேகம் முடிந்த பின்னர் மாடுகள் வேலகம்மாள் கோயில் இருந்த எல்லைக்கோட்டை நோக்கி ஓட்டம் விடப்பட்டது.
திருச்சி ராஜகோடி மந்தை மாடு முதலிடம் பெற்றது.

