/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டை அபகரிக்குறாங்க... பயிர்களுக்கு இழப்பீடு கொடுங்க
/
வீட்டை அபகரிக்குறாங்க... பயிர்களுக்கு இழப்பீடு கொடுங்க
வீட்டை அபகரிக்குறாங்க... பயிர்களுக்கு இழப்பீடு கொடுங்க
வீட்டை அபகரிக்குறாங்க... பயிர்களுக்கு இழப்பீடு கொடுங்க
ADDED : மே 28, 2024 05:20 AM

திண்டுக்கல்,மே : வீட்டை அபகரிக்குறாங்க,சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குங்க என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மனுக்களாக எழுதி மக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனுப்பெட்டியில் போட்டு சென்றனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல்விதி நடத்தையில் இருப்பதால் மனுக்களை பெறுவதற்காக மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் தங்கள் குறைகளை எழுதி போட்டு செல்கின்றனர்.
இதில் செங்கட்டாம்பட்டி கூட்டுறவு பண்ணை விவசாயிகள் நலச்சங்க தலைவர் நாகராஜன் தலைமையில் செங்கட்டாம்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில்,60 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் எங்கள் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மானாவாரி, புஞ்சை நிலங்கள் வழங்கப்பட்டது.
அதில் மானாவாரி பயிர்சாகுபடியில் ஈடுபடுகிறோம். விவசாய நிலங்களில் திடக்கழிவு, திரவக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகளும் எங்கள் கிராமங்களுக்கு வந்து விளைநிலங்களை பார்வையிட்டு சென்றனர். திடக்கழிவு, திரவக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் நிலத்தடிநீர் மாசுபடும், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு எங்களின் வாழ்வாதாரமும் பறிபோகும் நிலை ஏற்படும் எனக்குறிப்பிட்டனர்.
மா.கம்யூ., மாவட்ட செயலர் சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ராமசாமி, தலைவர் பெருமாள் கொடுத்த மனுவில், 10 நாட்களாக மழை பெய்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானது. 800 ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் சேமடைந்தது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்திருக்கின்றனர்.
மழையினால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலை உள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக்குறிப்பிட்டனர்.