/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராம்சன்ஸ் பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
/
ராம்சன்ஸ் பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஆக 22, 2024 03:53 AM

நத்தம்: நத்தம் ராம்சன்ஸ் மழலையர் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
மதுரை மீனாட்சி கண் மருத்துவமனை ,ராம்சன்ஸ் டிரஸ்ட் இணைந்து நத்தம் ராம்சன்ஸ் மழலையர் பள்ளியில் கண் பரிசோதனை, இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது. மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் 15 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். மாணவர்கள் 25 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ராமசாமி, டிரஸ்டி பாஸ்கரன், தலைமை ஆசிரியை தேவகி, ஒருங்கிணைப்பாளர் சரண்யா லயன்ஸ் கிளப் முன்னாள் பொருளாளர் கென்னடி, திரவியம், ராஜா பேசினர். ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், கார்த்திகேயன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.