/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலி நிருபர் கைது
/
ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலி நிருபர் கைது
ADDED : ஜூலை 31, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:பெரம்பலுார் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் 45. இவர் சில நாட்களுக்கு முன் பிரபல வார இதழ் ஒன்றின் பெயரை கூறி அதன் நிருபர் பேசுவதாக தேனி ஆர்.டி.ஓ.,வை தொடர்பு கொண்டுள்ளார். தங்களைப்பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு மிரட்டி உள்ளார்.
அந்த வார இதழின் நிருபரான திண்டுக்கல்லை சேர்ந்த சேர்ந்த சக்தியிடம் கூறினார். சைபர் கிரைம் போலீசில் சக்தி புகாரளித்தார். கூடுதல் எஸ்.பி.,தெய்வம், எஸ்.ஐ.,லதா தலைமையிலான போலீசார் இளங்கோவனை பெரம்பலுாரில் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.