ADDED : செப் 02, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் வரத்த அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.11 க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு அம்பிளிக்கை, கப்பலபட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி ,திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், மூலனுார் பகுதிகளிலிருந்து செடி முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் அதிகரித்தது. சி
ல நாட்களுக்கு முன் ஒரு கிலோ செடி முருங்கைக்காய் ரூ.30க்கு மேல் விற்றது. தற்போது வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து கொண்டே உள்ளது. நேற்று ஒரு கிலோ செடி முருங்கை ரூ. 11 க்கு விற்றது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.