/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுட்டெரிக்கும் வெயிலால் குறையும் நீர்மட்டம் கோடை மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

ADDED : ஏப் 21, 2024 04:44 AM
ஒட்டன்சத்திரம்: சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மாவட்டத்தில் வெயில் சுட்டெரிப்பதால் வெப்பநிலை நுாறு டிகிரிக்கு மேல் உள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. அதிக வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதற்கு ஏற்ப நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக கீழே செல்கிறது.
ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காய்கறிகள் பயறு வகைகள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. பயிர்களை காக்க கிணறுகள் ,போர்வெல்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனை நம்பி பல இடங்களில் வெங்காயம், தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் குறைவதால் விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச அதிக நேரம் செலவாகிறது. பயிரிட்ட காய்கறிகளை அறுவடை செய்ய முடியுமா என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோடை மழை பெய்தால் வெப்பம் குறைந்து நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைவதை தடுக்க வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.