sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உழவர் சந்தை வரிபாக்கி ரூ.4 கோடி; பழநி நகராட்சி கூட்டத்தில் புகார்

/

உழவர் சந்தை வரிபாக்கி ரூ.4 கோடி; பழநி நகராட்சி கூட்டத்தில் புகார்

உழவர் சந்தை வரிபாக்கி ரூ.4 கோடி; பழநி நகராட்சி கூட்டத்தில் புகார்

உழவர் சந்தை வரிபாக்கி ரூ.4 கோடி; பழநி நகராட்சி கூட்டத்தில் புகார்


ADDED : ஜூன் 25, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி உழவர் சந்தை வரிபாக்கி ரூ.4 கோடி உள்ளது. இதை வசூலிக்க நடவடிக்கை என்ன என பழநி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

பழநி நகராட்சி கூட்டம் தலைவர் (தி.மு.க.,) உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணை த்தலைவர் (மா.கம்யூ.,) கந்தசாமி, கமிஷனர் லியோன், திட்ட அலுவலர் புவனேஸ்வரன், நகர்நல அலுவலர் மனோஜ் குமார் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்:

பத்மினிமுருகானந்தம் (காங்.,): ராஜாஜி சாலையில் வெளியூர் நபர்கள் கோயிலுக்கு கனரக வாகனங்களை செல்வதால் மார்க்கெட் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தலைவர்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தீனதயாளன் (தி.மு.க.,): தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் டவர் அமைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் கட்டணங்கள் அதற்கு வசூலிக்கப்படுகிறதா

இளநிலை பொறியாளர்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெறப்பட்டு நகராட்சிக்கு பணம் கட்டி பணியை துவங்கி உள்ளனர்.

செபாஸ்டின் (தி.மு.க.,): தனியார் நிறுவனங்கள் நகராட்சி பகுதியில் டவர் அனுப்பும்போது அதற்கு வரி விதிக்க வேண்டும் .

காளீஸ்வரி (தி.மு.க.,): சண்முக நதி அருகே அமைக்கப்பட்டுள்ள மின் மயானம் திறப்பது எப்போது.

எங்கள் வார்டில் சாக்கடை, நாய் தொல்லை அதிகம் உள்ளது.

நகர திட்ட அலுவலர்: சண்முக நதி அருகே உள்ள மயானம் திறக்க அரசு தேதி அறிவிக்கும். நாய் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சாகுல் ஹமீது (தி.மு.க.,): கோடைகால நீர்த்தேக்கத்தில் தற்போது நீர் வறண்ட போது மீன்பிடித்து அசுத்தம் செய்கின்றனர். சரியான திட்டமிடல் இல்லாததால் சில பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

கமிஷனர்: தற்போது கோடைகால நீர்த்தேக்கத்தில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது .மீன்பிடி த்தல் நடைபெறாமல் தடுக்கப்படும்.

தீனதயாளன் (தி.மு.க.,): அடிவாரப் பகுதியில் வீடுகள் விடுதிகளாக செயல்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

கமிஷனர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

செபாஸ்டியன் (தி.மு.க.,): திருவள்ளுவர் சாலையில் உள்ள உழவர் சந்தைக்கு செல்ல விடாமல் வெளி புறம் கடைக்காரர்கள் தடுக்கின்றனர்.

செபாஸ்டியர் (தி.மு.க.,): தெரு நாய் தொல்லைக்கு நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்

நகர்நல அலுவலர் :தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் போது தடுப்பூசி போடப்படுகிறது.

சுரேஷ் (தி.மு.க.,): கீழ ரத வீதி நகராட்சி பள்ளி வகுப்பறைகள் சேரமடைந்துள்ளன.

இளநிலை பொறியாளர்: சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

சுரேஷ் (தி.மு.க.,): நகராட்சி பகுதிக்குள் மானியத்துடன் வீட்டு கட்டும் திட்டம் உள்ளதா. உழவர் சந்தை வரிவாக்கி 4 கோடியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா

கமிஷனர்: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் மானியத்துடன் கட்டலாம். உழவர் சந்தை வரியை வசூல் செய்ய கடிதம் எழுதப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us