/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்களை பரிதவிக்கவிடும் பழநி உழவர் சந்தை; ஆக்கிரமிப்பு கடைகளால் தொடரும் மன உளைச்சல்
/
மக்களை பரிதவிக்கவிடும் பழநி உழவர் சந்தை; ஆக்கிரமிப்பு கடைகளால் தொடரும் மன உளைச்சல்
மக்களை பரிதவிக்கவிடும் பழநி உழவர் சந்தை; ஆக்கிரமிப்பு கடைகளால் தொடரும் மன உளைச்சல்
மக்களை பரிதவிக்கவிடும் பழநி உழவர் சந்தை; ஆக்கிரமிப்பு கடைகளால் தொடரும் மன உளைச்சல்
ADDED : மே 16, 2024 05:41 AM

பழநி : பழநி திருவள்ளுவர் சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் வாகனம் நிறுத்த , காய்கறிகள் வாங்க, சுகாதார கேடுகளால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பழநி திருவள்ளூர் சாலையில் உள்ள உழவர் சந்தை பகுதியில் காலை,மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகளவு காணப்படும். இப்பகுதி சாலை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக உள்ளது. பழநி சுற்று கிராம பொதுமக்கள் அதிகாலை முதலே அதிகம் வருகின்றனர்.
உழவர் சந்தை அருகே சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் ஏராளம் செயல்படுகின்றன. ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் கடைகளில் முன்னால் வாகனங்களை நிறுத்தும்போது பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் வாகன நிறுத்த முடியாமல் உழவர் சந்தை வரும் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதோடு ஆக்கிரமிப்புகடைகளில் விற்கப்படும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன . இதோடு கடைகளால் நெருக்கடி ஏற்படுவதாடு உழவர் சந்தை செல்ல முடியாது பெண்கள் உள்ளிட்டோர் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் அதிக மக்கள் உழவர் சந்தையை நாடி வருவதால் நெருக்கடி அதிகரிக்கிறது . ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால் மக்கள் நிம்மதியாக உழவர் சந்தை செல்ல வசதி ஏற்படும் . நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய், நகராட்சி நிர்வாகம் ,போலீசார் துாக்கத்திலே உள்ளனர்.
இது மட்டுமன்றி உழவர் சந்தைக்குள் சாக்கடை தேங்கி சுகாதாரக் கேடை ஏற்படுத்துகிறது. குப்பையை முறையாக அகற்றுவதில்லை . சுகாதாரத்தை மேம்படுத்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் உழவர் சந்தை வரும் மக்கள் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது .
தினமும் இடையூறு
கவுரி, குடும்பத் தலைவி, பழநி : உழவர் சந்தை அருகே ஆக்கிரமிப்பு தரை கடைகள் அதிகம் உள்ளன. உழவர் சந்தைக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கும் அங்கே பயணிப்பதற்கு இடையூறு ஏற்படுகிறது. நெருக்கடியால் உழவர் சந்தை வரும் மக்கள் எளிதாக சென்று வர முடியாமல் சிரமம் அடைகின்றனர். உழவர் சந்தை வாயிலில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எளிதாக சென்று பொருட்களை வாங்கி வர முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே வாகன நிறுத்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை
தனபாக்கியம்,குடும்பத் தலைவி, பழநி : காலை 6:00 மணிக்கு உழவர் சந்தையில் பொருட்கள் விற்பனை துவங்கி விடுகிறது. வெளி கடைகள், வியாபாரிகள் அதிக அளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கிச் சென்று விடுகின்றனர்.
இதனால் சிறிது காலதாமமாக செல்லும்போது தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை. உழவர் சந்தைக்கு வெளியே உள்ள கடைகளில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. உழவர் சந்தை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.