/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆப்பிள் சாகுபடியில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்
/
ஆப்பிள் சாகுபடியில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்
ADDED : ஆக 09, 2024 06:43 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் சாகுபடி அளவு குறைந்து வருகிறது .
கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையில் ஆப்பிள் விளைச்சல் காண்கிறது. கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கேகேஎல்- 1, டிராபிகல் பியூட்டி, தாலமஸ், கோல்ட ஸ்பெர் வகை ஆப்பிள் மரங்கள் உள்ளன. இதில் கேகேஎல் - 1 அதிகளவு காய்ப்புத் திறனுடையதாக உள்ளது.
ஏப்ரலில் பூத்து ஜூலை ஆகஸ்ட்டில் பழங்கள் விளைச்சலாகிறது. 175 கிராம் முதல் 250 கிராம் வரை இதன் எடை உள்ளது. ஒரு மரத்திற்கு அதிகபட்சமாக 200 பழங்கள் விளைகிறது. இதையடுத்து விவசாய பரப்பை அதிகரிக்க தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆப்பிள் கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கியபோதும் விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் இதன் உற்பத்தி சாகுபடி அளவும் குறைந்து வருகிறது .
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் ரவீந்திரன் கூறியதாவது: துவக்கத்தில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கேகேஎல் - 1 ரக கன்றுகள் விவசாயிகளுக்கு ரூ. 300க்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிய போதும் விவசாயிகள் முக்கியத்துவம் கொடுக்காததால் ஆப்பிள் சாகுபடி பரப்பு அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது காஷ்மீரில் இருந்து வேர் செடிகள் கொண்டு வரப்பட்டு இங்கு நடவு செய்யப்பட்டு அதன் மூலம் ஆப்பிள் கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியும் நடக்கிறது. ரூ. 150 க்கு கன்றுகள் வழங்குகிறோம் . விவசாயிகள் இதன் சாகுபடியில் ஈடுபடும் பட்சத்தில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பராமரிப்பு ,தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளது என்றார்.