ADDED : மார் 03, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி ; வீட்டின் முன் சேவல் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், மகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி, காவேரிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி, 47. இவரது மகன் ரஞ்சித், 25; தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
வீட்டில் வளர்க்கும் சண்டை சேவல்களை கட்டி வைப்பது தொடர்பாக, தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கினர்.
ஆத்திரமடைந்த தந்தை, அரிவாளால் மகனை வெட்டினார். இதில், தலை, மார்பு ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த அவர், இறந்தார்.
சாணார்பட்டி போலீசார், முனியாண்டியை கைது செய்தனர்.