/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சோதனை சாவடியில் பழுதான இயந்திரம்
/
சோதனை சாவடியில் பழுதான இயந்திரம்
ADDED : ஏப் 21, 2024 04:47 AM

பழநி: பழநி- கொடைக்கானல் சாலை வனத்துறை சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரம் பழுதாகி உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. இதை தடுக்க பழநி- கொடைக்கானல் சாலையில் தோட்டம் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு பயணிகள் கொண்டு செல்லும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் ,பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரம் மூலம் அழித்து நகராட்சியிடம் ஒப்படைக்கின்றன.
தற்போது இந்த இயந்திரம் பழுதான நிலையில் இங்கு பிளாஸ்டிக் குப்பை குவிகிறது . இதன் இயந்திரத்தை சரி செய்யாது வனத்துறையும் வேடிக்கை பார்க்கிறது.
தற்போது கொடைக்கானலில் சீசன் தொடங்கி உள்ளதால் வெளி மாவட்டம் , மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

