/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதற்கோர் வழி காணுங்க... சாக்கடை கழிவுநீரில் புரளும் நாய்கள்; கோடை வெயிலிலும் புதிய தொற்று

ADDED : ஏப் 10, 2024 05:38 AM

திண்டக்கல் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்னையான குடிநீர், சாக்கடை, குப்பையோடு தெருநாய்களும் இணைந்து விட்ட நிலையில் தற்போது அதன் மூலமாக மேலும் ஒரு புதிய பிரச்னை தலைதுாக்கி வருகிறது.
ஏற்கனவே அதிகமாக உள்ள தெருநாய்களுக்கு சரியான உணவு கிடைக்காமல் வெறி பிடித்தும், வினோத வியாதியால் பாதிக்கப்பட்டுஉடலில் உள்ள முடிகள் கொட்டி விகாரமாகவும், பரிதாபமாகவும் சுற்றி திரிகின்றன. இதை கட்டுப்படுத்த குடியிருப்போர்கள் , பல தரப்பு அதிகாரிகள் மட்டத்தில் மனுக்கள் அளித்தும் சிறிதும் பயனின்றி உள்ளதாக மனம் வெதும்பி வருகின்றனர்.
தெருக்களில் அலைந்து திரியும் நாய்களானது தற்போது நிலவும் கடும் வெயில் சூட்டை சமாளிக்க முடியாமல் அல்லாடி வருகின்றன.
பல நாய்கள் உடற்சூட்டை தணிக்க சாக்கடைகளில் தேங்கிய கழிவு நீரில் உருண்டு, புரண்டு வருகிறது.
இதன்பின் உடல் முழுவதும் சகதிகளோடு தெருக்களில் வலம் வந்து அலங்கோல படுத்தி வருவதாக பரவலான குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
கோடைகாலத்தில் எளிதாக பரவும் பலவித நோய்களில் தெருநாய்களின் கழிவு நீர் பரப்பும் செயலானது இந்த நோய்களுக்கான ஊக்கியாக அமையும்படி உள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி சுகாதார மேம்பாட்டை காக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.