/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உங்களை தேடி உங்கள் ஊர் திட்ட முகாம்
/
உங்களை தேடி உங்கள் ஊர் திட்ட முகாம்
ADDED : ஆக 22, 2024 03:48 AM

நிலக்கோட்டை: - நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
பச்சைமலையான்கோட்டை , செம்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நுாலகம், மைக்கேல் பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் , ரேஷன் கடை, நுாத்தலாபுரம், கோட்டூர் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் புதிய கண்மாய் உருவாக்கும் பணிகள் குறித்துef ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டி.ஆர்.ஓ.,சேக் முகைதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, கலெக்டர் நேர்முக தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன் பங்கேற்றனர்.