ADDED : மே 28, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : உலக அவசர சிகிச்சை மருத்துவ தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் வடமலையான் மருத்துவமனை சார்பில் சேர்மன் புகழகிரி வடமலையான் அறிவுறுத்தலில் போலீசாருக்கு ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் கார்த்திகேயன்,ஏ.எஸ்.பி., சிபின், டி.எஸ்.பி.,ஜோசப் நிக்ஸன்,மருத்துவமனை கண்காணிப்பாளர் நட்ராஜமூர்த்தி, டாக்டர்கள் அகஸ்டின்,கிளைமண்ட், நவீன், சிவா, ராஜா,ரோமோரா, ரேவந்த்,வருண்,கோபி பங்கேற்றனர். விபத்தில் சிக்கியவர்களை முதலுதவி செய்து காப்பாற்றும் வழிமுறைகள், ஹெல்மட் அணிந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளிக்கப்பட்டது.