/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்ட அளவில் முதலிடம்; மாணவர்களுக்கு பாராட்டு
/
மாவட்ட அளவில் முதலிடம்; மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 09, 2024 12:50 AM

நத்தம்: மதுரை சகோதயா பள்ளிகள் சம்மேளனம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. பழனி ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியில் நத்தம் ராம்சன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 12 , 14 வயது உட்பட்ட இரு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் நடந்தது. வெற்றி மாணவர்கள், பயிற்சி ஆசிரியர் மகேந்திரன், விஜய் ஆகியோர்களை பள்ளி தாளாளர் ஆர்.எஸ்.ராமசாமி பாராட்டி கேடயம் வழங்கினார். பள்ளியின் ஆட்சி குழு உறுப்பினர் பாஸ்கரன், நிர்வாக அதிகாரி தையல்நாயகி, முதல்வர் எழில் கலந்து கொண்டனர்.