/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செல்லமந்தாடியில் மீன்பிடி திருவிழா
/
செல்லமந்தாடியில் மீன்பிடி திருவிழா
ADDED : மே 13, 2024 06:05 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லமந்தாடி குல்வாரி குளத்தில் நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டார மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மீன்களை அள்ளி சென்றனர்.
திண்டுக்கல் செல்லமந்தாடி பகுதியில் குல்வாரி குளம் உள்ளது. இங்கு மழை நேரத்தில் தண்ணீர் நிரம்பி கெண்டை,ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் வளர்ந்தன. தற்போது கோடை காலம் என்பதால் குளத்தில் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. இதனால் ஊர்மக்கள் சேர்ந்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து அருகிலிருக்கும் ஊர் மக்களுக்கு அறிவித்தனர். அதன்படி நேற்று காலை முதல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள மக்கள் குல்வாரி குளத்தில் மீன்பிடி திருவிழாவில் ஆர்வமாக பங்கேற்று குடும்பத்தோடு வந்தனர். குளத்து கரையிலிருந்து கோயிலில் வழிபாடு நடத்தியதை தொடர்ந்து மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று வலைகளை பயன்படுத்தி பெரிய பெரிய மீன்களை பிடித்தனர். தொடர்ந்து மாலை வரை நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றவர்கள் தங்களுக்கு கிடைத்த மீன்களை மகிழ்ச்சியாக வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர்.