/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை கோயிலில் இன்று பூக்குழி
/
வடமதுரை கோயிலில் இன்று பூக்குழி
ADDED : மார் 24, 2024 05:50 AM

வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் இன்று இரவு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இக்கோயில் மாசித்திருவிழா மார்ச் 9ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 17ல் அம்மன் சாட்டுதல், மார்ச் 19 முதல் நேற்றிரவு வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 11:00 மணிக்கு நுாறுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை அக்கினிச்சட்டி, மாவிளக்கு, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும், மார்ச் 26ல் முளைப்பாரி மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை தக்கார் பாலசரவணன், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

