ADDED : ஜூன் 17, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் பூ விலை உயர்ந்தது.
விசேஷ நாட்கள் பக்ரீத் பண்டிகையொட்டி பூக்களின் தேவைக்காக மலர் சந்தையில் வியாபாரிகள் குவிந்ததால் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மல்லி ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனையானது. கனகாம்பரம் 1000, முல்லை 250, ஜாதிப்பூ 500க்கு விற்றது.
வரத்து குறைந்து பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலம் தவறிய மழை, திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டதால் பூ வரத்து குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.