/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்பந்து லீக்; ராக்போர்ட்ஸ் அணி வெற்றி
/
கால்பந்து லீக்; ராக்போர்ட்ஸ் அணி வெற்றி
ADDED : ஜூலை 02, 2024 05:54 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த கால்பந்து லீக் போட்டியில் திண்டுக்கல் ராக்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் நடந்து வரும் லீக் கால்பந்து போட்டியில் ஜி.டி.என்.எப்.சி., அணி, திண்டுக்கல் ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 5:1 என்ற கோல் கணக்கில் வென்றது.
அணியின் ஸ்டெஜின் 2, சந்தோஷ் தலா 2 கோல், கோல்சன் 1 கோலும் அடித்தார். ராக்போர்ட் அணி வீரர் முத்துபாலன் 1 கோல் அடித்தார்.
மற்றொரு ராக்போர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி காந்திகாரம் கால்பந்து அணியை எதிர்கொண்டது. இதில் 3:2 என் கோல் கணக்கில் ராக்போர்ட்ஸ் அணி வென்றது. அணியின் முத்து, ஹக், பாலா தலா 1 கோல் அடித்தனர். காந்திகிராம அணியில் ஹரிஹரன், மதன் தலா 1 கோல்கள் அடித்தனர்.
ஜி.டி.என்.எப்.சி., அணி காந்திகிராம அணி இடையேயான போட்டியில் ஜி.டி.என்.எப்.சி., அணி 3:1 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் நிக்சன், பெக்சன், கோல்சன் தலா 1 கோல் அடித்தனர். காந்திகிராம அணி சார்பில் மதல் 1 கோல் அடித்தார்.
ஜி.டி.என்., கால்பந்து அணி, லயோலா கால்பந்து அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் நிக்சன் கோல் அடித்தார்.
காந்திகிராம் கால்பந்து அணி, காமராஜபுரம் கால்பந்து அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் தினேஷ் கோல் அடித்தார்.
ஜி.டி.என்., கால்பந்து அணி, நிலக்கோட்டை சோலார் கால்பந்து அணியை 6:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் ஸ்டேயின் 3, சுஜீத் 2, பெர்சன் 1 என கோல் அடித்தனர்.
நிலக்கோட்டை சோலார் கால்பந்து அணி மற்றும் காமாராஜபுரம் கால்பந்து அணிக்குமிடையேயான போட்டி 0:0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவு பெற்றது.
முதல் டிவிஷன் போட்டிகள்
*கொடைக்கான்ல கே.எப்.டபில்யூ.ஏ., கால்பந்து அணி, சச்சின் சாக்கர் கால்பந்து அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் கார்த்திக், மார்டின் ஆகியோர் கோல் அடித்தனர்.
*அதேபோல், தாடிகொம்பு ஸ்டார் எப்.சி., அணி, சச்சின் சாக்கர்ஸ் கால்பந்து அணியினை 3:0 என்ற கோல்கணக்கில் வென்றது. அணியின் மணிமகேஷ், ராம்சாத் மற்றும் பார்சில் ஆகியோர் கோல் அடித்தனர்.
* மைக்கேல்பாளையம் புனித மைக்கேல் கால்பந்து அணி, அரசு மேல்நிலைப்பள்ளி ஓல்டு பாய்ஸ் கால்பந்து அணியினை 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் டென்சிங் கோல் அடித்தார்.
*மைக்கேல்பாளையம் புனித மைக்கேல் கால்பந்து அணி, நிலக்கோட்டை ஸ்டார் சோலார் கால்பந்து அணியை 4:0 என்ற கோல் கணக்கின் வென்றது.
இரண்டாவது டிவிஷன் போட்டி
* புனித ஜோசப் கால்பந்து அணி, லைன் ஸ்ட்ரீட் கால்பந்து அணியை 1:0 என் கோல் கணக்கில் வென்றது. அணியின் பாலா கோல் அடித்தார்.
நான்காம் டிவிஷன் போட்டிகள்
*வத்தலகுண்டு ராயல் கால்பந்து கிளப் அணி, கொரோநேசன் கால்பந்து அணியை 3:0 என்ற கோல்கணக்கில் வென்றது. அணியின் சசிகாந்த் 2, மகேந்திரன் 1 என கோல் அடித்தனர்.
* அதேபோல், ஜி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கால்பந்து அணி, புனித ஜோசப் பாலி கால்பந்து அணியினை 6:1 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் அகேலேஷ் குமார் 4, பிளவின், லின்டர் தலா 1 என கோல்கள் அடித்தனர்.
* அன்னை ஸ்போர்ட் கால்பந்து அணி, பீலே ஸ்போர்ட்ஸ் கிளப் கால்பந்து அணியினை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது. அணியின் சீனி, முத்துப்பாண்டி கோல் அடித்தனர். பீலே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பில் நிக்சன் கோல் அடித்தார்.
* மற்றொரு போட்டியில் கீதா டிம்பர்ஸ் அணி, ஞானம் நினைவு கால்பந்து அணியினை 5:2 என்ற கோல் கணக்கில் வென்றது. பிராவின், ஹாரில், அப்துல், கபிலன், யோகேஷ் ஆகியோர் கோல்கள் அடித்தனர். ஞானம் அணி சார்பில் ஜாவித் மற்றும் அபினேஷ்யூ கோல் அடித்தனர்.