/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்பந்து லீக்: செயின்ட்மேரீஸ் அணி வெற்றி
/
கால்பந்து லீக்: செயின்ட்மேரீஸ் அணி வெற்றி
ADDED : மே 28, 2024 04:51 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் நடந்த கால்பந்து தொடர் போட்டியில் செயின்ட்மேரீஸ் எப்.சி.அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த கே.பி.சுந்தரம் செட்டியார், நாகர்கோவில் சிவன்செட்டியார் நினைவு கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் மோதிய கீதா டிம்பர்ஸ் எப்.சி.அணி, பேல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் 1:1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் ஆட்டத்தை முடித்தது.
கீதா டிம்பர்ஸ் எப்.சி. அணியின் ராஜசேகர், பேல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் சிபிராஜ் தலா ஒரு கோல் அடித்தனர். கீதா டிம்பர்ஸ், ரத்தினபாண்டியன் நினைவு கோப்பையின் 2வது டிவிஷன் லீக் போட்டியில் மோதிய செயின்ட்மேரீஸ் எப்.சி.கால்பந்து அணியானது ஏ.பி.சி., பாலிடெக்னிக் எப்.சி. அணியை 3:0 என்ற கோல்கணக்கில் வென்றது. டோமியன் 2, தமிழ் 1 கோல்கள் அடித்தனர். என்.எஸ்.புரம்விஜயராகவேலு நினைவு, அரசன் ஜூவல்லர்ஸ் கோப்பையின் 3வது டிவிஷன் லீக் போட்டியில் மோதிய பத்மாவதி பெருமாள் நினைவு எப்.சி.அணியானது தாஸ் சோக்கர்ஸ் எப்.சி.அணியை 1:0 என்ற கோல்கணக் கில் வென்றது. மேத்யூ டோக்லாஸ் ஒரு கோல் அடித்தார்.