/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வார்டு ரவுண்ட் அப் பகுதிக்காக... சாக்கடை துார் வாராததால் சுகாதாரக் கேடு சாக்கடை துார்வாராததால் சுகாதாரக்கேடு பரிதவிப்பில் பழநி 10வது வார்டு மக்கள்

ADDED : மே 23, 2024 04:01 AM

பழநி: கிழக்கு தோட்டக்கார தெரு, வடக்கு தோட்டக்கார தெரு, நரசிம்மன் சந்து, சித்தநாதன் தெரு பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை கொண்ட பழநி நகராட்சி 10 வது வார்டில் அங்கன்வாடி மையம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
மேலும் சாக்கடைகள் துார்வாராததால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை கருதி பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது வார்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆக்கிரமிப்பால் அவதி
கதிர்வேல், டிரைவர், வடக்கு தோட்டத்கார தெரு: வார்டில் அங்கன்வாடி மையம் இல்லாத நிலையில் இதை அமைக்க போதுமான இடமும் இல்லை.
இதற்கு தகுந்த இடத்தை அரசு தேர்வு செய்து அங்கன்வாடி மையத்தை அமைக்க வேண்டும். வெளிநபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடையில் சேர்வதால் அடிக்கடி
ஜம்புகேஸ்வரி, குடும்பத்தலைவி, சித்தநாதன் தெரு: குறுகலான சந்துகள் உள்ள இங்கு சாக்கடைகள் முறையாக துார்வாரப்படுவதில்லை. பிளாஸ்டிக் குப்பை சாக்கடையில் சேர்வதால் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகிறது.
இவற்றைத் தவிர்க்க பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.
போதை நபர்கள் நடமாட்டம்
தியாகராஜன், ஓய்வு அரசு அதிகாரி, வடக்கு தோட்டத்கார தெரு: திருட்டுகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவற்றை கண்காணிக்க நகராட்சி சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஜிகா குடிநீர் இணைப்பை அணைத்து வீடுகளுக்கும் அளிக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தை முறையாக வழங்க வேண்டும்.
விரைவில் பாதாள சாக்கடை
சண்முகப்பிரியா, கவுன்சிலர் (தி.மு.க.,) : வார்டு பகுதியில் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. பெண் நாய்களுக்கும் கருத்தடை செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா பொறுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நடக்க உள்ளது. அங்கன்வாடி மையம் அமைய வார்டில் இடம் இல்லை.
அருகில் உள்ள பகுதிகளில் அமைக்க எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஜிகா குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.