/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் புலி : உறுதி செய்த வனத்துறை
/
கொடைக்கானலில் புலி : உறுதி செய்த வனத்துறை
UPDATED : செப் 07, 2024 07:56 AM
ADDED : செப் 07, 2024 02:54 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ் குண்டாறு பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
கொடைக்கானல் கூக்கால் கீழ் குண்டாறு பகுதியில் நகராட்சி குடிநீர் கிணறு கட்டடத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராவில் புலி நடந்து செல்வது பதிவானது. இதே போல் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள குருசரடி மயிலாடும்பாறை இடையே வனப்பகுதியிலிருந்து வந்த புலி ரோட்டை கடந்தது.
அவ்வழியாக வந்த வாகன ஒட்டிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' கீழ் குண்டாறு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். புலி நடமாட்டத்தை கண்டறிய டிராப் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன'' என்றார்.